ஒடிசா, மேற்கு வங்க கடற்கரையை ஒட்டி காற்றழுத்த தாழ்வுப்பகுதி நீடிக்கிறது; 4 நாட்களுக்கு தமிழகத்தில் ஒருசில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை: வடக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய ஒடிசா, மேற்கு வங்க கடற்கரையை ஒட்டி காற்றழுத்த தாழ்வுப்பகுதி நீடிக்கிறது. இது அடுத்த 48 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெறக் கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதன் காரணமாக 14, 15-ம் தேதிகளில் நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கன மழையும், மேற்குதொடர்ச்சி மலையை ஒட்டிய இதரமாவட்டங்கள் திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, ஈரோடு,தருமபுரி, சேலம், கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யும் என கூறப்பட்டுள்ளது.

16, 17-ம் தேதிகளில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி மாவட்டங்கள், உள்மாவட்டங்கள், கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் அடுத்த 48 மணிநேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் கூறினார்.

Related Stories: