குடிநீர் வாரிய பணிமனை அலுவலகம் இடமாற்றம்

சென்னை:  சென்னை குடிநீர் வாரியம், பகுதி அலுவலகம் 4க்கு உட்பட்ட உதவி பொறியாளர் அலுவலகம், பணிமனை - 44, தற்போது கதவு எண் 3, வடிவேல் 2வது குறுக்கு தெரு, பெரம்பூர், சென்னை என்ற முகவரியில் இயங்கி வருகிறது. நாளை் முதல் இந்த அலுவலகம், கதவு எண் 41/61, சுப்பிரமணியம் பிரதான தெரு, வியாசர்பாடி, சென்னை என்ற முகவரியில் செயல்படும்.  குடிநீர் மற்றும் கழிவுநீர் சம்பந்தப்பட்ட புகார்கள், குடிநீர் வரி மற்றும் கட்டணம் செலுத்துதல் சம்பந்தமாக மேற்கண்ட முகவரியில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இதற்காக உதவிப் பொறியாளரை 81449 30044, துணைப் பகுதிப் பொறியாளரை 81449 30211 என்ற செல்போன் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

Related Stories:

>