ராணுவம் சார்பில் ஏழைகளுக்கு உணவு

சென்னை: கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கு உணவளிக்க இந்திய ராணுவத்தின் சென்னை பிரிவு சார்பில், ‘ஆபரேஷன் சஹாயதா’ மேற்கொண்டது. இதில் ஏழை எளிய மக்களுக்கு, கடந்த மே 25ம் தேதி முதல் உணவு பொட்டலங்கள், முன்னாள் படை வீரர்களால் நடத்தப்படும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து வழங்கப்படுகிறது. முதன்மையாக சென்னை ரயில் நிலையத்தில் உணவு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, இதுவரை 4,000க்கும் மேற்பட்ட உணவு பாக்கெட்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

Related Stories:

>