1000 படங்களுக்கு மேல் டப்பிங் பேசிய கண்டசாலா ரத்னகுமார் கொரோனாவுக்கு பலி

சென்னை: ஆயிரம் படங்களுக்கு மேல் டப்பிங் பேசிய கண்டசாலா ரத்னகுமார் கொரோனாவுக்கு உயிரிழந்தார்.  இசையமைப்பாளரும் பாடகருமான கண்டசாலாவின் மகன் கண்டசாலா ரத்னகுமார். இவர் தமிழிலிருந்து தெலுங்கில் டப்பிங் ஆகும் படங்களின் ஹீரோக்களுக்கு பின்னணி பேசுவார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்பட பல மொழி படங்களுக்கும் டப்பிங் பேசியுள்ளார். ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட டிவி தொடர்களுக்கும் டப்பிங் பேசியுள்ளார்.சிவப்பு நிறத்தில் சின்னப்பூ படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட ரத்னகுமார், சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு மாரடைப்பு ஏற்பட்டு நேற்று இறந்தார். அவரது மனைவி வீணா, டப்பிங் கலைஞராகவும் பாடகியாகவும் உள்ளார்.

Related Stories: