நாடு முழுவதும் தடுப்பூசி தட்டுப்பாடு எதிரொலி: கொரோனா தடுப்பூசி உற்பத்தி தொழிற்சாலை அமைக்க கேரள அரசு முடிவு

திருவனந்தபுரம்: தடுப்பூசி தொழிற்சாலை அமைக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா 2வது அலையின் பாதிப்பு மிகப் பெரிய அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால், மக்களிடமும் தடுப்பூசி போடும் ஆர்வம் அதிகரித்து வருகிறது. ஆனால், பல்வேறு மாநிலங்களில் தடுப்பூசிக்கு தொடர்ந்து பற்றாக்குறை நீடித்து வருகிறது. இதையடுத்து தமிழ்நாடு, கேரளா உள்பட பல்வேறு மாநிலங்கள் சொந்தமாக தடுப்பூசி தயாரிக்க முடிவு செய்துள்ளன. இந்த நிலையில் கேரள அரசும் தடுப்பூசி உற்பத்தி தொழிற்சாலை அமைக்க முடிவு செய்துள்ளது.

திருவனந்தபுரம் அருகே உள்ள தோனைக்கல் பகுதியில் உள்ள உயிரி அறிவியல் பூங்காவில் தடுப்பூசி தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்காக சித்ரா என்ற ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் குழுவினரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: