ஓரின சேர்க்கையாளர்களுக்கு அங்கீகாரம் அளிப்பது குறித்து உரிய விதிமுறைகளை வகுக்க வேண்டும்: மத்திய, மாநில அரசுகளுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: ஓரின சேர்க்கையாளர்களுக்கு அங்கீகாரம் அளிப்பது குறித்து மத்திய, மாநில அரசுகள் உரிய விதிமுறைகளை வகுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரையை சேர்ந்த இரு இளம் பெண்கள்  நெருக்கமாக பழகியதில், அது காதலில் முடிந்தது. இந்நிலையில் தன் பெற்றோர்களிடம் இருந்து பாதுகாப்பு கோரி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.  இதையடுத்து, இந்த வழக்கில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவு வருமாறு: ஆணோ, பெண்ணோ, மாயமானதாக புகார் வந்தால், அதுகுறித்த விசாரணையில் அவர்கள் ஓரினச்சேர்க்கையாளர்கள் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்று கண்டறியப்பட்டால் அவர்களின் வாக்குமூலங்களைப் பதிவு செய்த பின் வழக்கை முடித்து, எந்தவித துன்புறுத்தல்களுக்கும் உள்ளாக்காமல் அவர்களை விடுவிக்க வேண்டும். ஓரினச்சேர்க்கையாளர்களை கையாள்வதில் திறமை வாய்ந்த தொண்டு நிறுவனங்களின் பட்டியலை மத்திய சமூக நீதித்துறை 8 வாரங்களில் வெளியிட வேண்டும். அவர்களுக்கு தேவையான நிதி, சட்ட உதவிகளை வழங்க வேண்டும். ஓரினச்சேர்க்கையாளர்கள் தங்க வசதியாக தங்குமிடங்களை போதுமான உள்கட்டமைப்பு வசதிகளுடன் 12 வாரங்களில் ஏற்படுத்த வேண்டும். ஓரினச்சேர்க்கயைாளர்கள் தொடர்பாக மத்திய மாநில அரசுகள் உரிய விதிமுறைகளை வகுக்க வேண்டும்.இந்த உத்தரவு மீது எடுத்த நடவடிக்கைகள் குறித்து ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

Related Stories: