இம்மாத இறுதிக்குள் 37 லட்சம் தடுப்பூசிகள் வரும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

ஊட்டி: ஊட்டி அருகே மசினகுடி, செம்மநத்தம் பழங்குடியின கிராமத்தில் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நேற்று நடந்தது. முகாமை துவக்கி வைத்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:

கொரோனா தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டு சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. நீலகிரி மாவட்டத்தில் பழங்குடியின மக்கள் வசிக்க கூடிய அனைத்து கிராமங்களிலும் அவர்கள் குடியிருக்கும் பகுதிகளுக்கே சென்று தடுப்பூசி போடும் பணி துவக்கப்பட்டுள்ளது. இம்மாத இறுதிக்குள் பழங்குடியின மக்கள் 100% தடுப்பூசி போட்டுக் கொண்டனர் என்ற நிலையை எட்ட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகம் முழுவதும் அனைத்து பகுதியிலும் தகுதியான அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த அரசு நடவடிக்கைகள் எடுத்து வர கூடிய சூழலில், தடுப்பூசி கிடைப்பதில் சிக்கல்கள் உள்ளன. தடுப்பூசிகள் வர வர அவை அனைத்து பகுதிகளுக்கும் பிரித்து அனுப்பப்பட்டு வருகின்றன. ஜூன் மாத இறுதிக்குகள் நமக்கு 37 லட்சம் தடுப்பூசிகள் வரும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: