ஸ்டான்லி அரசு மருத்துவமனை ஊழியர்கள் பணியிடை நீக்கம்

தண்டையார்பேட்டை: திருவொற்றியூரை சேர்ந்த வீரசேகர் என்பவர் கடந்த 2015ம் ஆண்டு ஸ்டான்லி மருத்துவமனையில் தோட்டக்காரராக பணிபுரியும் கிருஷ்ணமூர்த்தி மற்றும் லேபில் டெக்னிஷியனாக பணிபுரியும் வாசு ஆகியோருக்கு ரூ.25 லட்சம் கடன் கொடுத்துள்ளார். பணத்தை குறிப்பிட்ட காலத்துக்குள் இருவரும் காசோலையாக வீரசேகரிடம் கொடுத்துள்ளனர். அதன்படி வீரசேகர் அந்த காசோலையை வங்கியில் செலுத்தியபோது பணம் இல்லாமல் காசோலை திரும்பி வந்தது.  இதுகுறித்து திருவொற்றியூர் நீதிமன்றத்தில் வீரசேகர் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கு விசாரித்த மாஜிஸ்திரேட் இசக்கி மகேஷ்குமார், இருவருக்கும் 6 மாதம் சிறை தண்டணையும், காசோலை பணத்தை கொடுக்காவிட்டால் மீண்டும் ஒரு மாதம் கூடுதல் தண்டனையும் அனுபவிக்க உத்தரவிட்டார். நீதிமன்ற உத்தரவை வீரசேகர் ஸ்டான்லி மருத்துவமனை டீனிடம் கொடுத்தார். கிருஷ்ணமூர்த்தி, வாசு இருவரையும் தற்காலிக பணி நீக்கம் செய்து டீன் பாலாஜி உத்தரவிட்டார்.    

Related Stories: