பிளஸ் - டூ தேர்வு குறித்து சட்டமன்ற கட்சி பிரதிநிதிகளிடம் கருத்து கேட்க முடிவு: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி!

சென்னை: பிளஸ் - டூ தேர்வு குறித்து சட்டமன்ற கட்சி பிரதிநிதிகளிடம் கருத்து கேட்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். தேர்வை ரத்து செய்வதா? இல்லையா என்பது குறித்து முதலமைச்சர் கேட்டுக்கொண்ட படி நாளை சட்டமன்ற பிரதிநிதிகளிடம் கருத்து கேட்கப்படும். தேர்வை நடத்தவில்லை எனில் மேற்படிப்புக்கு மாணவர்கள் எப்படி செல்வார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. தேர்வை நடத்துவதா இல்லையா என்பது குறித்து முதலமைச்சர் நல்ல முடிவு எடுப்பார். திடீரென நீட் தேர்வு நடைபெற்றால் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு மட்டுமே சாதகமாக அமையும் என்ற கருத்தும் எழுந்துள்ளது.

Related Stories: