அரசின் தீவிர கொரோனா தடுப்பு நடவடிக்கையால் 32,221 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்: சுகாதார துறை தகவல்

சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 24,405 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று 32,221 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். மேலும் சிகிச்சை பலனின்றி 460 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில்: தமிழகத்தில் நேற்று 1,79,438 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், 24,405 பேருக்கு தொற்று உறுதியானது. இதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,81,96,279. சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளிகள் 32,221 பேர் குணமடைந்தனர்.

இதையடுத்து மருத்துவமனை மற்றும் வீட்டு தனிமையில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 2,80,426 ஆக உள்ளது. சிகிச்சை பலனின்றி 460 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து தமிழகத்தில் மொத்தம் 25,665 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், நேற்றைய மொத்த பாதிப்பில் சென்னையில் 2062 பேர், செங்கல்பட்டு 983, கோவை 2,980, ஈரோடு 1,671, காஞ்சிபுரம் 492, தஞ்சாவூர் 1020, திருவள்ளூர் 695, திருப்பூர் 1264 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 24,405 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: