நாடு கடத்தி வர இந்திய விமானம் சென்ற நிலையில் டொமினிகா மருத்துவமனையில் மெகுல் சோக்சி திடீர் அனுமதி: காயத்துடன் உள்ள புகைப்படம் வெளியானது

புதுடெல்லி:  பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடன் வாங்கி மோசடி செய்த வழக்கில் வைர வியாபாரி மெகுல் சோக்சியை நாடு கடத்தி வருவதற்காக இந்தியா தனி விமானம் அனுப்பியுள்ள நிலையில், அவர் டொமினிகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,500 கோடி கடன் வாங்கி மோசடி செய்து விட்டு வெளிநாட்டு தப்பிச் சென்ற இந்திய வைர வியாபாரி மெகுல் சோக்சி, கடந்த  வாரம் டொமினிகாவின் டவ்காரி கடற்கரையில் கைது செய்யப்பட்டார். சட்ட விரோதமாக தனது நாட்டிற்குள்  நுழைந்ததாக மெகுல் சோக்சியை டொமினிகா போலீசார்   கைது செய்தனர். அவருக்கு கொரோனா பரிசோதனை உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைகள் செய்ய நீதிமன்றம்  உத்தரவிட்டது.  இதில் அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. அவரை இந்தியாவுக்கு நாடு கடத்தி வருவதற்காக இந்திய அரசு நேற்று முன்தினம் டொமினிகோவுக்கு சிறப்பு விமானத்ைத அனுப்பி இருப்பதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், காயங்களுடன் மெகுல் சோக்சி இருக்கும் புகைப்படங்கள் வெளியாகின.  டொமினிகா போலீசாரின் காவலில் இருந்த மெகுல்சோக்சி தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக நேற்று முன்தினம் இரவு தகவல்கள் வெளியானது.  இதனிடையே, மெகுல் சோக்சியை கடத்திய சம்பவத்தில்  ஈடுபட்டதாக கூறப்படும் இரண்டு இந்திய ஏஜென்டுகள் டொமினிக்காவை விட்டு வெளியேறியதாக தகவல் வெளியாகி இருக்கிறது. பாண்டல் குர்ஜித், சிங் குர்மிட் ஆகியோர் சோக்சி கைது செய்யப்பட்ட சம்பவத்துக்கு பின் கரிபீயன் தீவை விட்டு லண்டனுக்கு தப்பிச் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 23ம் தேதி சோக்சி ஆன்டிகுவாவில் இருந்து டொமினிகாவிற்கு  கடத்தப்பட்டதாக கூறும்  படகின்  புகைப்படமும், ஆன்டிகுவாவில் 2 இந்தியர்கள் படகில் ஏறும் புகைப்படமும் வெளியாகி உள்ளது. மெகுல் சோக்சியின் வழக்கறிஞர்கள் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு, நாளை டொமினிகோ உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

Related Stories: