கிருஷ்ணகிரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து: விபத்தில் குழந்தை உள்பட 5 பேர் உயிரிழந்த பரிதாபம்..!

ஓசூர்: கிருஷ்ணகிரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஓரமாக நின்றுகொண்டிருந்த எரிவாயு டேங்கர் லாரி மீது ஆம்னி வேன் மோதிய விபத்தில் குழந்தை உள்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். குடும்ப நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு குடியாத்தத்தில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் ஆம்னி காரில் பெங்களூரு நோக்கி சென்றுகொண்டிருந்தனர். அவர்கள் கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் சுண்டம்பட்டி என்ற பகுதியில் சென்ற போது சாலையின் ஓரமாக நின்றுகொண்டிருந்த எரிவாயு டேங்கர் லாரி மீது ஆம்னி வேன் பின்புறமாக மோதியது. இதில் ஓட்டுநர் ரமேஷ், அஞ்சலி, தீபா மற்றும் ஒரு வயது குழந்தை ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இதில் மற்றோருவர் கிருஷ்னகிரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போது வழியிலேயே உயிரிழந்தார். இதனால் விபத்தில் 5 பேர் உயிரிழந்த நிலையில் படுகாயம் அடைந்த 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: