முதல் காவுவாங்கிய கருப்பு பூஞ்சை நோய்: புதுச்சேரியில் பெண் ஒருவர் உயிரிழப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் கருப்பு பூஞ்சை நோய்க்கு பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். கருப்பு பூஞ்சை நோய்க்கு ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பற்று வந்த எழிலரசி என்ற பெண் உயிரிழந்துள்ளார். தமிழகம் மட்டுமல்லாமல் அணைத்து மாநிலத்திலும் கருப்பு பூஞ்ஞை நோய் பரவி வருகிறது. கொரோனாவால் குணமடைந்து வீடு திரும்பியவர்களுக்கு தற்போது கருப்பு பூஞ்சை நோய் அதிகம் பரவி வருகிறது. கொரோனாவை தொடர்ந்து தற்போது கருப்பு பூஞ்சை நோய் அதிக அளவில் பரவி வருகிறது. 

புதுவையில் தற்போது அரசு ஊழியர் உள்பட 20 பேருக்கு மேலாக  கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்த சூழ்நிலையில் கொரோனா பாதித்தவர்களை கருப்பு பூஞ்சை எனும் புதிய கொடிய நோய் தாக்குவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதலில் வடமாநிலங்களில் காணப்பட்ட இந்த நோய் தாக்கம் தற்போது தமிழகம், புதுச்சேரியிலும் புகுந்து மக்களை கலக்கமடைய வைத்துள்ளது.

Related Stories: