சென்னை: பயணிகள் எண்ணிக்கை குறைவு காரணமாக சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘பயணிகள் குறைவு காரணமாக ரத்து செய்யப்பட்ட சிறப்பு ரயில்கள் இயக்கம் தேதி நீட்டிக்கப்படுகிறது. அதன்படி கொச்சுவேலி-மங்களூரு ஜங்சன் ரயில் வரும் ஜூன் 3, 5, 10, 12ம் தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கத்தில் மங்களூரு ஜங்சன்-கொச்சுவேலிக்கு ஜூன் 4, 6, 11, 13 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது. இதேபோல் தற்காலிகமாக நாளை முதல் 15ம் தேதி வரை கோழிக்கோடு-திருவனந்தபுரம் ரயில் இருமார்க்கத்திலும் ரத்து செய்யப்படுகிறது.