ஜம்மு காஷ்மீர் புல்வாமா தாக்குதலில் வீரமரணமடைந்த ராணுவ வீரரின்மனைவி அதிகாரியானார்

சென்னை:  பரங்கிமலையில் உள்ள  ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில்  இளம் ராணுவ அதிகாரிகளுக்கான 11 மாத ராணுவ பயிற்சி நடந்தது.  இதில், 111 ஆண்கள், 31 பெண்கள் மற்றும் 25 வெளிநாட்டு வீரர்கள் என மொத்தம் 167 பேர் பயிற்சி பெற்றனர். இவர்களின் பயிற்சி நிறைவு பெற்றதையடுத்து,  நிறைவு விழா  ராணுவ மைதானத்தில்  நேற்று  நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக லெப்டினன்ட் ஜெனரல்  ஒய்.கே,ஜோஷி  கலந்து கொண்டு, அணிவகுப்பு வீரர்களின்  மரியாதையை ஏற்றுக் கொண்டார். பின்னர் சிறந்த அணிவகுப்பினை நடத்தியவர்களுக்கு பரிசு வழங்கினார். கடந்த 2019 பிப்ரவரி மாதம் ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் நடந்த தீவிரவாத  தாக்குதலில் ராணுவ வீரர் மேஜர் விபூதி சங்கர் தவுண்டியால் வீரமரணமடைந்தார். இதனையடுத்து  அவரது மனைவி நிதிகாவுக்கு பணி வழங்க ராணுவம் முன்வந்து. இந்நிலையில், அவர் தற்போது  பயிற்சி முடித்து நேற்று அதிகாரப்பூர்வமாக ராணுவ அதிகாரியானார். விழாவில் ராணுவ அதிகாரிக்கான ஸ்டாரை லெப்டினன்ட்  ஜெனரல்  ஒய்.கே.ஜோஷி வழங்கினார்.

Related Stories: