டெல்லியில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் வரும் 31ம் தேதி முதல் ஊரடங்கு தளர்வு: முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு

டெல்லி: டெல்லியில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் கட்டுப்பாடுகளை திங்கள் கிழமை முதல் டெல்லி அரசு தளர்த்த உள்ளது. டெல்லியில் கொரோனா பாதிப்பு கடந்த சில வாரங்களாக குறைந்து வருகிறது. தொற்று பாதிப்பு குறைந்து வருவதையடுத்து, வரும் திங்கள் கிழமை முதல் கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்படும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். செய்தியளர்களுக்குப் பேட்டி அளித்த கெஜ்ரிவால் கூறுகையில், “ டெல்லியில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் திங்கள் கிழமை காலை 5 மணி வரை உள்ளது. அதன்பிறகு கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்த உள்ளோம்.

திங்கள் கிழமை முதல் கட்டுமானப்பணிகள், தொழிற்சாலைகள் மீண்டும் செயல்பட அனுமதி அளிக்கப்படும்.  அன்றாடம் ஊதியம் பெறுபவர்களை மனதில் கொண்டு இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.  டெல்லியில் தொற்று பாதிப்பு விகிதம் 1.5 சதவிகிதமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,100- பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  மக்கள் மற்றும் நிபுணர்களின் பரிந்துரைகளை பெற்று ஒவ்வொரு வாரமும் கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்படும். தொற்று பாதிப்பு உயர்ந்தால் தளர்வுகளை நிறுத்திவைப்போம். எனவே, அனைவரும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்” என்றார்.

Related Stories: