பிரதமர் மோடியால் இந்தியா இன்று கையறு நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளது: காங்., ஊடக பிரிவு தலைவர் குற்றச்சாட்டு

சென்னை:  காங்கிரஸ் ஊடக பிரிவு தலைவர் கோபண்ணா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: கொரோனா வைரசால் ஏற்பட்ட பேரழிவைப் பார்த்து, தேசத்தை ஆளும் தலைமை கையறு  நிலையில் இருப்பதையும், கண்டுகொள்ளாமல் திரும்பிக் கொள்வதையும்  பார்க்கும்போது, தலைமைப் பொறுப்பில் இருப்பவர் நாட்டின் முதல் பிரதமர்  ஜவஹர்லால் நேருவின் நிர்வாக புத்திசாலித்தனத்தை இழந்துவிட்டார் என்பது  புரிகிறது. இக்கட்டான சூழலில் அவர் ஆட்சி செய்தபோது, அவருடைய கொள்கைகளும் செயல்களும் அதே விஞ்ஞான மனநிலையால் நிர்வகிக்கப்பட்டன.  மலேரியா, சின்னம்மை, பாலியல் நோய்கள், தொழுநோய் உள்ளிட்ட  நோய்களுடன் வீரமான, வெற்றிகரமான சண்டைகளை நிகழ்த்தியிருக்கிறார்.

நேருவின் வெற்றி ரகசியம், அவர் கொண்டு வந்த பொது  சுகாதார அமைப்புகள்தான். எல்லாவற்றுக்கும் மேலாக,  ‘நெருக்கடியில் இந்தியா’, ‘நம்மை எப்படித் தோற்கடித்தார் மோடி’ போன்ற  தலைப்பிட்டு உலக ஊடகங்களில் இப்போது வந்து கொண்டிருக்கும் தலைப்புச்  செய்திகளைப் போல்,  அவர் பிரதமராக இருந்திருந்தால் வந்திருக்காது. பிரதமர்  நேரு தலைமையில் கொரோனா தொற்றை மிக திறமையாகவும் விஞ்ஞான ரீதியாகவும்  கையாண்டிருப்போம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: