கூட்டுறவு சங்கத்தின் கீழ் உள்ள ரேஷன் கடை ஊழியர்களை முன்கள பணியாளர்களாக அறிவிக்க வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை

சென்னை:தமிழ்நாடு கூட்டுறவு பண்டகசாலை ஊழியர்கள் சங்க  மாநில நிர்வாகிகள் கூட்டம் காணொலி காட்சி மூலம் நடந்தது. இதில் சங்க பொதுச்செயலாளர் வெங்கடாசலபதி, தலைவர் குருசாமி, பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: அத்தியாவசிய பணியில் ஈடுபடும் கூட்டுறவு சங்க நியாயவிலைக்கடை பணியாளர்கள் தொடர்புடைய அலுவலக பணியாளர்களை முன்கள பணியாளர்களாக அறிவிக்க வேண்டும்.

கூட்டுறவு துறையின் கீழ் நியாயவிலை கடைகள் நடத்தும் அனைத்து வகை கூட்டுறவுகளின் அனைத்து பணியாளர்களுக்கும் தேர்தலையொட்டி ஊதிய உயர்வு வழங்கிய நிலையில் தொடக்க கூட்டுறவு பண்டக சாலையின் பணியாளருக்கும், ஊதிய உயர்வு பதிவாளர் அளவில் வழங்க அரசு ஏற்கனவே அனுமதி வழங்கிய உள்ளதின்படி அமலாதாஸ் கூடுதல் பதிவாளர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழு கடந்த பிப்ரவரி மாதம் பதிவாளரிடம் அறிக்கை வழங்கப்பட்டது. இதன்படி பதிவாளர் அலுவலகத்தில் உள்ள உயர் அதிகாரிகள் புதிய ஊதியம் வழங்க பதிவாளர் ஆணைக்கு வைக்கப்பட்டுள்ள பழைய நடவடிக்கையினை அந்தந்த பண்டகசாலையின் நிதியில் ஊதிய உயர்வு பெற்றுக்கொள்ள பதிவாளருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தினை பயன்படுத்தி காலம் தாழ்த்தாமல் உடன் ஊதிய உயர்வு வழங்க வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: