காவிரி ஆற்றை தூர்வாரும் பணியை கண்காணிக்க 8 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை சிறப்பு கண்காணிப்பு அலுவலர்களாக நியமித்து தமிழக அரசு ஆணை..!!

சென்னை: காவிரி ஆற்றை தூர்வாரும் பணிகளை கண்காணிக்க 8 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை சிறப்பு கண்காணிப்பு அலுவலர்களாக நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. இது தொடர்பாக தமிழ்நாடு கழக செயலாளர் இறையன்பு விடுத்துள்ள உத்தரவில், தஞ்சாவூர் மாவட்டத்திற்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவன மேலாண்மை இயக்குனர் பிரதீப் யாதவ், திருவாரூர் மாவட்டத்திற்கு கால்நலத்துறை செயலாளர் கோபால், நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு உயர்கல்வித்துறை செயலாளர் அபூர்வா, மயிலாடுதுறை மாவட்டத்திற்கு குடிசை மாற்று வாரிய மேலாண்மை இயக்குனர் கிர்லோஷ் குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். 

அதேபோன்று அரியலூர், கரூர், புதுகோட்டை மாவட்டத்திற்கு ஏற்கனவே கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ள ரமேஷ் சந்த்  மீனா, விஜயராஜ் குமார், ஜம்பு கல்லோலிகர், ரீட்டா ஹரிஷ் தாக்கர் ஆகியோர் கூடுதலாக தூர்வாரும் பணிகளை கண்காணிக்கும் பணியிலும் ஈடுபட அறிவிக்கப்படுகின்றனர். இந்த பணிகளுக்கு நியமனம் செய்யப்பட்டுள்ள சிறப்பு கண்காணிப்பு அலுவலர்கள், அந்தந்த மாவட்டங்களில் பணிகள் முடியும் வரை தங்கி இருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. 

மாவட்ட ஆட்சியர், சிறப்பு கண்காணிப்பு அலுவலர்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றும் ஆணையிடப்பட்டுள்ளது. சிறப்பு கண்காணிப்பு அலுவலர்கள் தூர்வாரும் பணிகள் தொடர்பாக அறிக்கையை தலைமை செயலாளர், பொதுப்பணித்துறை அரசு செயலாளர் முதல்வர் அலுவலகத்திற்கு அவ்வப்போது வழங்க வேண்டும் என்றும் இந்த பணிகளை பொதுப்பணித்துறை செயலாளர், சிறப்பு கண்காணிப்பு அலுவலர்களுடன் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

Related Stories: