கத்தாரில் கைதான 24 மீனவரை மீட்க வெளியுறவு அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

சென்னை: கடந்த மார்ச் 22ம் தேதி ஈரான் நாட்டிலிருந்து, அந்நாட்டில் பதிவு செய்யப்பட்ட படகில் மீன் பிடிக்க கடலுக்குச் சென்ற  கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 20 மீனவர்கள் மற்றும் கேரள மீனவர்கள் 4 பேர் என 24 இந்திய மீனவர்கள் மார்ச் 25ம் தேதி கத்தார் நாட்டு கடற்பகுதியில் கைது செய்யப்பட்டனர். சிறையில் அடைக்கப்படுவதற்கு முன்பாக கத்தாரில் உள்ள ரஸ் லாபான் காவல் நிலையத்தில் அவர்கள் விசாரிக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில், அவர்களது நிலை என்னவானது என்று அறியாமல் கவலையடைந்துள்ள அவர்களது குடும்பத்தினர் அரசு உடனடியாக தலையிடவேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர். இதனையடுத்து, முதலமைச்சர் மு.கஸ்டாலின்,  மேற்கூறிய விவரங்களைக் குறிப்பிட்டு, கத்தாரில் உள்ள இந்தியத் தூதரகத்தின் வாயிலாக அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு, சிறையில் உள்ள இந்திய மீனவர்களை விடுதலை செய்து, தாயகத்திற்கு அனுப்பிட வேண்டும் என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

Related Stories: