அமேசான் பிரைம் ஓ.டி.டி. தளத்தில் ஒளிபரப்ப உள்ள தி பேமிலி மேன் 2 தொடரை தடை செய்ய வேண்டும்: மத்திய அமைச்சருக்கு தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கடிதம்

சென்னை: தமிழ்நாடு அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஒன்றிய தகவல் மற்றும் ஒளிபரப்புத்  துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகருக்கு எழுதிய கடிதம்: ஈழத்தமிழர்களை தவறாகவும் மோசமாகவும் மிகவும் ஆட்சேபத்திற்குரிய  வகையில் சித்தரிக்கும் கருத்துகள் அடங்கிய ‘தி பேமிலி மேன் 2’ என்ற கண்டனத்துக்குரியது.   தமிழ்ப் பேசும் நடிகையான சமந்தா   தீவிரவாதியாகக் காட்சிப்படுத்தியுள்ளது, உலகெங்கிலும் வாழும் தமிழர்களின் பெருமையின் மீதான நேரடித் தாக்குதல் என்பதோடு,  இதுபோன்ற உள்நோக்கமும் விஷமத்தனமுமான பரப்புரையை யாராலும் சகித்துக்கொள்ள முடியாது.

இலங்கையில் சமத்துவம், நீதி,  அமைதி மற்றும் கண்ணியத்திற்காக பல ஆண்டுகளாக நமது ஈழத் தமிழர்கள் போராடி வருகையில், அமேசான் பிரைம் போன்ற நிறுவனம்  இதுபோன்றதொரு பரப்புரையை மேற்கொள்வது அவசியமற்றதாகும். இந்த தொடர் ஈழத் தமிழர்களின் உணர்வுகளை மட்டுமல்லாது தமிழர்களின் உணர்வுகளையும் புண்படுத்தியுள்ளது. இத்தொடர்  ஒளிபரப்பப்பட்டால், மாநிலத்தில் நல்லிணக்கத்தை பேணுவது கடினம். இந்தச் சூழ்நிலையில், அமேசான் பிரைம் ஓ.டி.டி. தளத்தில்  ஒளிபரப்பப்படவுள்ள இந்தத் தொடரை தமிழகத்தில் மட்டுமல்லாது நாடு முழுவதிலும் நிறுத்தவோ அல்லது தடை செய்யவோ உடனடி  நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: