என்னைப்போல மேலும் 3 ஆசிரியர்கள் உள்ளனர்: கைதான ஆசிரியர் வாக்குமூலம்

சென்னை: ஆன்லைன் மூலம் மாணவிகளுக்கு தொந்தரவு கொடுத்த புகாரின் அடிப்படையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு எஸ்.பி ஜெயலட்சுமி பத்மா சேஷாத்திரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலனை பிடித்து வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் விசாரணை நடத்தினர். அப்போது கைது செய்யப்பட்ட ஆசிரியர் ராஜகோபாலன் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்ததாக கூறியதாவது: பத்மா சோஷத்திரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலனிடம் செல்போன் மற்றும் லேப்டாப்பை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினோம்.

விசாரணையில் கடந்த 5 ஆண்டுகளாக 11,12ம் வகுப்பு படிக்கும் மாணவிகளின் செல்போன் எண்களை சேகரித்து வாட்ஸ் அப் மூலம் பாடம் தொடர்பான சந்தேகங்களை கூறுவது போல் மாணவிகளுக்கு பாலியல் உணர்வை தூண்டுவது போல் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். மேலும் சில மாணவிகளின் ஆபாச படங்களை வாட்ஸ் ஆப் மூலம் பெற்று லேப்டாப்பில் பதிவு  செய்து வைத்தது தெரியவந்தது.  தன்னை போன்று மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த மேலும் 3 ஆசிரியர்கள்  பணியாற்றி வருகின்றனர். அவர்கள் மீது எந்த புகாரும் வரவில்லை.

மாணவிகள் தன்னை குறித்து டிவிட்டரில் பதிவு செய்த பிறகு தன்னுடைய செல்போனில் இருந்த மாணவிகளின் ஆபாச படங்கள், குறுஞ்செய்தியை அழித்தது விசாரணையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. ராஜகோபாலின் செல்போன் மற்றும் லேப்டாப்பில் இருந்து கைப்பற்றப்பட்ட மாணவிகளின் ஆபாச படங்கள் பிரபல சினிமா பிரபலங்கள் மற்றும் தொழிலதிபர்களின் பிள்ளைகளை குறித்து வைத்து இதுபோன்று சம்பவங்களில் ஈடுபட்டுள்ளது விசாரைணயில் தெரியவந்துள்ளது. இவ்வாறு போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Related Stories: