திருவண்ணாமலையில் அத்தியாவசிய கடைகள் மட்டுமின்றி நகைக்கடைகளிலும் சமூக இடைவெளியின்றி திரண்ட மக்கள் கூட்டம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் அத்தியாவசிய கடைகள் மட்டுமின்றி நகைக்கடைகளிலும் சமூக இடைவெளியின்றி மக்கள் திரண்டன. ஒரே நேரத்தில் ஏராளமானோர் பயணித்ததால் முக்கிய சாலைகளிழும் போக்குவரத்து நேரிசல் ஏற்பட்டது. திருவனாமலையில் தேரடிவீதி, திருவுடல் தெரு, சின்னக்கடை வீதி உள்ளிட்ட இடங்களில் காய்கறி, மளிகை கடைகளில் காலை முதலே கூட்டம் அலைமோதியது.

சமூக இடைவேளியை காற்றில் பறக்கவிட்டு மக்கள் போட்டிபோட்டு பொருட்களை வாங்கி செல்வதால் கொரோனா வேகமாக பரவும் அச்சம் நிலவுகிறது. காய்கறி மட்டுமின்றி நகை உள்ளிட்ட அத்தியாவசியமற்ற பொருட்களையும் வாங்க மக்கள் போட்டி போட்டுகொண்டு உள்ளார். ஒரே நேரத்தில் ஏராளமானோர் வாக்கங்களில் பயணித்ததால் சாலைகளில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இதனால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசாரும் திணறும் நிலை ஏற்பட்டது.

இதேபோல் விழுப்புரத்திலும் பொருட்கள் வாங்க ஒரேநேரத்தில் ஏராளமானோர் திரண்டதால் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. விழுப்புரத்தில் நேருஜி சாலை, காமராஜர் வீதி உள்ளிட்ட இடங்களில் காய்கறி, மளிகை பொருட்களை வாங்க தொடர்ந்து மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

போலீசார் சமூக இடைவெளியை பின்பற்ற தொடர்ந்து வலியுறுத்திய போதும் அவற்றை மக்கள் கண்டுகொள்ளவில்லை. விதிகளை காற்றில் பறக்கவிட்டு வீட்டுக்கு தேவையான பொருட்களை மக்கள் மொத்தமாக வாங்கி செல்வதால் கொரோனாபரவல் மேலும் அதிகரிக்கும் அச்சம் நிலவுகிறது.

Related Stories: