முழு ஊரடங்கின்போது காரணமின்றி சுற்றினால் கைது: திருவள்ளூர் போலீசார் அறிவிப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் காவல் மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அத்தியாவசிய தேவைகளின்றி சுற்றித்திரியும் வாகனங்களை பறிமுதல் செய்து, உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர். கடந்த 15ம் தேதியில் இருந்து 8 நாட்களில் கொரோனா நோயை பரப்பும் வகையில் பொது இடங்களில் முக கவசம் அணியாமலும் சமூக இடைவெளியை கடைப் பிடிக்காமலும் சுற்றி திரிந்தவர்களின் மீது 1691 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. காரணமின்றி சுற்றி திரிந்தவர்களின் 1989 வாகனங்களை பறிமுதல் செய்தும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றாமலும், முககவசம் அணியாமலும், காரணமின்றி வாகனங்களில் சுற்றி திரியும் நபர்கள்மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதுபற்றி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் (பொறுப்பு) சண்முகப்பிரியா கூறுகையில்,’’ பொதுமக்கள் தங்கள் நலனுக்காகவும் அவர்களை சார்ந்தவர்களின் நலனுக்காகவும் காவல்துறையினருக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடவேண்டும். அரசின் வழிமுறைகளை பின்பற்றி வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்கவேண்டும். தேவையில்லாமல் வெளியே வருவதை கண்டிப்பாக தவிர்க்கவேண்டும்’ என்றனர்.

Related Stories: