9 தமிழக மீனவர்களை மீட்டு தரக்கோரி பாதுகாப்புத்துறை அமைச்சருடன் டி.ஆர்.பாலு நேரில் சந்திப்பு: தேடுதல் பணியை தீவிரப்படுத்த உத்தரவு

சென்னை: தமிழக மீனவர்கள் 9 பேரை மீட்டு தரக்கோரி மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங்கை நேரில் சந்தித்து டி.ஆர்.பாலு கோரிக்கை விடுத்தார். தொடர்ந்து தேடுதல் பணியை தீவிரப்படுத்த மத்திய அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.  நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 9 தமிழக மீனவர்கள் லட்சத் தீவு அருகில் படகுக் கோளாறினால் காணாமல் போனதையடுத்து, அவர்களை மத்திய கடலோர காவல் படையினரின் உதவியுடன் உடனடியாக மீட்டுத்தர வேண்டுமென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பாதுகாப்புத்துறை அமைச்சருக்கு கடந்த 16ம் தேதியன்று கடிதம் எழுதியிருந்தார்.  அதனை தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி நேற்று திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, டெல்லியில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து, தமிழக மீனவர்களை உடனடியாக மீட்டுத்தர ஆவன செய்ய வேண்டுமென்று வலியுறுத்தினார்.

இந்த சந்திப்பின் போது மத்திய அமைச்சர் உடனடியாக தமிழக மீனவர்களை தேடும் பணியை துரிதப்படுத்த கடலோர காவல் படையினரின் தலைமை அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தேடுல் பணி துரிதப்படுத்தப்படும் என்று தமிழக முதலமைச்சரிடம் தெரிவிக்குமாறு டி.ஆர்.பாலுவிடம் கூறினார். 1 கோடி கோவிட் தடுப்பூசி: தமிழகத்துக்கு 1 கோடி கோவிட் தடுப்பூசி வழங்க வேண்டும்.,செங்கல்பட்டு ஆலையில் 300 கோடி ரூபாய் முதலீடு செய்து தடுப்பூசி தயாரிக்க  வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தனை நேற்று டி.ஆர். பாலு எம்.பி. நேரில் சந்தித்து கடிதம் வழங்கினார்.

Related Stories: