கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகள் பற்றி சமூக வலைதளத்தில் வெளியிடக்கூடாது; குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் எச்சரிக்கை

சென்னை: தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் உறுப்பினர் டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த் வெளியிட்ட அறிவிப்பு:  கொரோனா தொற்றின் 2வது அலைக்கு எதிராக இந்தியா தொடர்ந்து போரிட்டு வருகிறது. இப்பெருந்தொற்று பல குழந்தைகளை ஆதரவற்றவராக, கைவிடப்பட்டவராக ஆக்கியிருக்கிறது. நன்கொடை கோருகின்ற மற்றும் அத்தகைய  குழந்தைகளை தத்தெடுத்துக்கொள்ள முன்வருவது பற்றிய செய்திகள் சமூக வலைதளங்களில் வெளிவர தொடங்கியுள்ளது. சிலர்  நன்கொடை வழங்க கோரிக்கை விடுப்பதும், தத்தெடுப்புக்கான வேண்டுகோளை செய்வது சட்டத்தை  மீறுபவையாகும். .

குழந்தைகளை கவனித்துக்கொள்ள யாரும் இல்லாத பட்சத்தில் அதுகுறித்து காவல்துறைக்கு அல்லது மாவட்டத்தில் குழந்தை நலவாழ்வு குழுவிற்கு தகவல் அளிக்கலாம். மேலும் 1098 என்ற சைல்டு லைனை தொடர்பு கொள்ளலாம். முறையான  விசாரணை நடத்திய பிறகு மற்றும் சட்டத்தில் உள்ள நடைமுறையை பின்பற்றியதற்கு பிறகு, சட்டப்பூர்வ தத்தெடுப்புக்கு உரிய குழந்தை என்று அக்குழந்தை தொடர்புடைய குழந்தை நல்வாழ்வு குழு மட்டுமே அறிவிக்கலாம். நடைமுறைகளை  கடைபிடிக்காமல் செய்யப்படுகின்ற குழந்தை தத்தெடுப்புகளுக்கு தண்டனை நடவடிக்கைகள் எடுப்பதற்கு வழிவகை செய்யும்.

சட்டத்தில் குறிப்பிடப்பட்ட நடைமுறைகள் அல்லது விதிகளை பின்பற்றாமல் தத்தெடுப்பு நோக்கத்திற்காக எந்தவொரு  அனாதை குழந்தைகளையும் வழங்க முன்வரும் அல்லது தருகிற அல்லது பெருகிற செயலை எந்தவொரு நபர், அமைப்பு, நிறுவனம் செய்யுமானால் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும். . மேலும்  எந்தவொரு நோக்கத்திற்காகவும் ஒரு குழந்தையை விற்கின்ற அல்லது வாங்குகிற எந்தவொரு நபருக்கும் 5 ஆண்டுகள் வரை கடும் சிறைத்தண்டனை, ரூ.1 லட்சம் அபராதம் என்ற தண்டனை விதிக்கப்படும்.

Related Stories: