வெளிநாட்டில் மருத்துவம் படித்து காத்திருக்கும் 500 மாணவர்கள் உடனடியாக மருத்துவ பணியை தொடரலாம்: சுகாதாரத்துறை அறிவிப்பு

சென்னை: வெளிநாட்டில் மருத்துவம் படித்த பயிற்சிக்காக காத்திருந்த 500 பேர் உடனடியாக மருத்துவ பணியை தொடங்கலாம் என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து  வரும் நிலையில் டாக்டர்கள், செவிலியர்கள் பற்றாக்குறை ஏற்படாத வகையில் தமிழக அரசு சார்பில் பணி நியமனம் செய்து வருகின்றனர். ஆனாலும் மூன்றாவது அலை வரும் பட்சத்தில் நிலைமை மேசமாகி விடக்கூடாது என்பதற்காக  தமிழக அரசு பல்வேறு கட்ட தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

மேலும் மாநகராட்சி சார்பில் 300 டாக்டர்கள், ெசவிலியர்கள் நியமிக்கப்பட்டனர். அதில் பயிற்சி மருத்துவர்களும் பணியில் நியமித்தனர். இதையடுத்து ரஷியா,  பிலிப்பைன்ஸ், மணிலா, அமெரிக்க உட்பட வெளிநாடுகளில் மருத்துவம் படித்தவர்களையும் கொரோனா பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினரிடம் இருந்து கோரிக்கைகள் வந்தது.வெளிநாட்டில் மருத்துவம் படித்தவர்கள்  இந்தியாவில் மருத்துவம் செய்ய நெக்ஸ்ட் என்ற நுழைவு தேர்வை எழுதி தேர்ச்சி பெற்றவர்கள் தமிழ்நாட்டின் மருத்துவ படிப்பின் போது ₹5 லட்சம் கட்டணம் செலுத்த வேண்டும் என்று அவர்கள் தமிழகத்தில் பயிற்சி பெறும் வகையில் ஓராண்டு  பணிபுரிந்த பின்பே மருத்துவ பணி தொடர முடியும் என்று விதிகள் இருந்தது.

இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மருத்துவர்கள் தேவை அதிகரித்துள்ளதால் இந்த 2 விதிகளையும் தளர்த்தி தமிழக அரசு உத்தர விட்டுள்ளது.  தற்போது வெளிநாட்டில் மருத்துவம் படித்து காத்திருக்கும் 500 மருத்துவ மாணவர்கள் உடனடியாக மருத்துவ பணியை தொடரலாம் என்று தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Related Stories: