எழும்பூர் பழைய போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் காவலர்களுக்கான கொரோனா முடிவு பரிசோதனை செய்த அன்றே வெளியீடு: வீடுதேடி வந்து அழைத்து செல்வர்

சென்னை: சென்னை மாநகர காவல் துறை சார்பில் எழும்பூர் பழைய போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொரோனா பரிசோதனை சிறப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் போலீசார் பரிசோதனை செய்தால் அவர்களுக்கு அன்றே பரிசோதனை முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் அதற்கான ஏற்பாடுகளை மாநகர காவல் துறை செய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே மாநகர காவல் துறையில் பணியாற்றும் போலீசார் காய்ச்சல் ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட காவலர் பணியாற்றும் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மற்றும் எழுத்தரை தொடர்பு கொள்ள வேண்டும் என்று உயர் போலீசார் அறிவித்துள்ளனர். அப்படி காய்ச்சல் காரணமாக பாதிக்கப்படும் காவலர்கள் கொரோனா பரிசோதனை செய்ய முடிவு செய்து இருந்தால், வெளியில் பரிசோதனை செய்ய வேண்டாம். அதற்கு பதில் சம்பந்தப்பட்ட காவலர் வீடுகளுக்கு அதிகாலையிலேயே காவல் துறை சார்பில் ஆம்புலன்ஸ் அனுப்பி வைக்கப்பட்டு பரிசோதனை மையத்திற்கு அழைத்து வரப்படுவார்.     

Related Stories: