போர்க்கால அடிப்படையில் நடமாடும் மருத்துவமனைகளை செயல்படுத்திட வேண்டும்: முதல்வருக்கு பாலகிருஷ்ணன் கடிதம்

சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் நகரங்களில் மட்டுமின்றி, கிராமப்புறங்களிலும் கொரோனா பெருந்தொற்று தினசரி வேகமாகப் பரவி வருகிறது. உயிரிழப்புகளும் ஏற்பட்டுக் கொண்டுள்ளன.  தற்போது பொதுமுடக்கம் போன்றவைகளால் கிராமப்புற மக்கள் தங்கள் கிராமங்களை விட்டு வெளியே செல்ல முடியாமலும், மருத்துவ பரிசோதனை, மருத்துவர் ஆலோசனை பெற முடியாமலும் தவித்து வருகின்றனர்.

எனவே, தமிழகம் முழுவதும் கிராமப்புறங்களில் வாழும் மக்களை பரிசோதிப்பது, மருத்துவ ஆலோசனைகள் மற்றும் மருந்துகள் வழங்குவதற்கு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுடன் கூடிய நடமாடும் மருத்துவமனைகளை அனைத்து  ஒன்றியங்களுக்கும் போதுமான அளவு ஏற்பாடு செய்து  மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும்.  இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: