புதிய அரசி ரேஷன் அட்டைதாரர்களுக்கும் கொரோனா நிவாரணம் வழங்கப்படும்!: முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு..!!

சென்னை: புதிய அரசி ரேஷன் அட்டைதாரர்களுக்கும் கொரோனா நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு குடும்ப அட்டைகள் மூலம் ஜூன் 3 அன்று ரூ.4000 நிவாரணம் வழங்கப்படும் என தேர்தல் அறிக்கையில் திமுக கூறியிருந்தது. அதன்படி முதல்வராகப் பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின் முதல் கையெழுத்தாக ரூ.4000 நிவாரணத் தொகை அளிக்கும் திட்டத்தில் கையெழுத்திட்டார். 

இதையடுத்து, முதல் கட்டமாக இந்த மாதமே ரூ.2000 அளிக்கப்படும். இந்த மாதம் 16ம் தேதி முதல் வழங்கப்படும் என அரசாணை வெளியிடப்பட்டது. அதன்படி தமிழகத்தில் உள்ள 2 கோடியே 7 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டு ரூ.2000 நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள 2 லட்சத்து 14 ஆயிரத்து 950 புதிய அரசி ரேஷன் அட்டைதாரர்களுக்கும் கொரோனா நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 

ரூ.42.99 கோடி செலவில் மே மாதத்தில் இருந்து முதல் தவணையாக ரூ.2000 நிவாரணம் வழங்குவதற்கும் முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதற்கு முன்னதாக 2 கோடியே 7 லட்சத்து 66 ஆயிரத்து 950 பேருக்கு மட்டுமே கொரோனா நிவாரண நிதி வழங்குவதற்கான உத்தரவானது பிறப்பிக்கப்பட்டிருந்தது. தற்போது புதிதாக சேர்க்கப்பட்டிருக்கக்கூடிய அரசி ரேஷன் அட்டைதாரர்களுக்கும் கொரோனா நிவாரண வழங்க முதல்வர் ஆணையிட்டுள்ளார். 

Related Stories: