இரவு நேர விமானங்கள் ரத்து

சென்னை: தமிழ்நாட்டில் நேற்று முதல் இ-பதிவு நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி சென்னை உள்நாட்டு விமான நிலையங்களில் பயணிக்கும் பயணிகள் அனைவருக்கும் இ-பதிவு முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதையொட்டி சென்னையில் இருந்து மதுரை, கோவை, திருச்சி, தூத்துக்குடி ஆகிய இடங்களுக்கு பயணிக்கும் பயணிகள் இ-பதிவுடன் நேற்று பயணம் செய்தனர். சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் 33 புறப்பாடு விமானங்களில் 1,800 பயணிகளும், 35 வருகை விமானங்களில் 1,200 பேரும் பயணிக்கின்றனர். அதிலும் ஐதராபாத் விமானத்தில் 4, தூத்துக்குடி விமானத்தில் 6, கோவை விமானத்தில் 9 பேர் மட்டுமே பயணம் செய்கின்றனர். இந்நிலையில் இரவுநேர விமானங்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

Related Stories:

>