தமிழகத்துக்கு ஒரு நாளுக்கு 20 ஆயிரம் ரெம்டெசிவிர் மருந்தை உயர்த்தி வழங்கிய ஒன்றிய அரசு: முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி

சென்னை: தமிழகத்துக்கு ஒரு நாளுக்கு 20 ஆயிரம் ரெம்டெசிவிர் மருந்தை உயர்த்தி வழங்கிய ஒன்றிய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை:  முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று ஒன்றிய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயலுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதினை கருத்தில் கொண்டு,  தமிழ்நாட்டிற்கு வழங்கி வரும் ரெம்டெசிவிர் மருந்து ஒதுக்கீட்டு அளவினை உயர்த்தி வழங்குமாறு மத்திய அமைச்சரிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

இக்கோரிக்கையினை ஏற்று நாளொன்றுக்கு 7000 என்ற அளவில் வழங்கி வந்த ரெம்டெசிவிர் மருந்தினை தற்பொழுது நாளொன்றுக்கு 20,000 என்ற அளவில் உடனடியாக உயர்த்தி வழங்கியமைக்காக தன் நன்றியினை முதல்வர்  தெரிவித்துள்ளார். கொரோனா பெரும் தொற்றினை எதிர்த்து போராடிடும் இத்தருணத்தில், குறித்த நேரத்தில் உயிர் காக்கும் மருந்து, ஆக்ஸிஜன் மற்றும் உபகரணங்கள் ஆகியவற்றின் தேவை இன்றியமையாதது எனவும் தனது கடிதத்தில்  முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: