சென்னை : அரபிக்கடலில் உருவான டவ்-தே புயல் அதி தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.டவ்-தே புயல் மணிக்கு 9 கிலோமீட்டர் வேகத்தில் வடக்கு நோக்கி நகர்ந்து வருகிறது. குஜராத்தில் இருந்து 730 கி.மீ. தெற்கு தென்கிழக்கு திசையில் புயல் நிலை கொண்டுள்ளது. 12 மணிநேரத்திற்குள் இது, புயல் வலுப்பெற்று, நாளை மறுநாள் குஜராத்தின் போர்பந்தர்-நாலியா இடையே கரையை கடக்கும் என தெரிவித்துள்ளது. புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 175 கிலோமீட்டர் வரை பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.