மாஸ்க் அணிந்து வந்தவர்களுக்கு மாலை, பழங்களுடன் மரியாதை: ஊத்துக்கோட்டை போலீசார் அசத்தல்

ஊத்துக்கோட்டை: தமிழகத்தில் கொரோனாவின் 2வது அலை தீவிரமாக பரவிவருவதால் அவற்றை தடுக்க தமிழக அரசு முழுமூச்சில் செயல்பட்டு வருகிறது. போலீசாரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர். அத்துடன் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்தநிலையில் ஊத்துக்கோட்டை  காவல்துறை சார்பில், ஊத்துக்கோட்டை டிஎஸ்பி சாரதி  தலைமையில், ஊத்துக்கோட்டை இன்ஸ்பெக்டர் குமார், எஸ்ஐ வரதராஜன் மற்றும் சிறப்பு எஸ்ஐ முரளி  ஆகியோர் ஊத்துக்கோட்டை அண்ணாசிலை 4 முனை சந்திப்பு பகுதியில் உயர்கோபுர மின்விளக்கு அருகில் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

அப்போது முக கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு அறிவுரை கூறி போலீசார் எச்சரித்து அனுப்பினர். ஆனால் முக கவசம் அணிந்துவந்தவர்களுக்கு போலீசார் பாராட்டு தெரிவித்ததுடன் மாலை அணிவித்தனர். பின்னர் ஆப்பிள், ஆரஞ்சு, மாதுளம் பழங்களை வழங்கி அவர்களை கவுரவித்தனர்.

Related Stories:

>