அரசு ஊழியர்களுக்கான ஈட்டிய விடுப்பு ஊதியம் ஓராண்டுக்கு நிறுத்தி வைப்பு: தமிழக அரசு ஆணை வெளியீடு

சென்னை: அரசு ஊழியர்களின் ஈட்டிய விடுப்புக்கான ஊதியம் வழங்கும் திட்டத்தை ஓராண்டுக்கு நிறுத்தி வைத்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் 15 நாட்கள் அல்லது 2 ஆண்டுகளுக்கு 30 நாட்களுக்கான ஈட்டிய விடுப்பு ஊதிய பலனை பெறலாம். இந்த சலுகை மாநில கழகங்கள், உள்ளாட்சி அமைப்புகள், வாரியங்கள், பல்கலைக்கழகங்கள், ஆணையங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பயிற்சி மையங்கள், கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தற்போது கொரோனா பரவலின் 2ம் அலையின் தாக்கம் அதிகம் ஏற்பட்டுள்ளதால் அதை எதிர்கொள்ள அதிக நிதி ஆதாரங்கள் தேவைப்படுகிறது. எனவே, ஈட்டிய விடுப்பு ஊதிய திட்டத்தை ஓராண்டுக்கு அதாவது 2022 மார்ச் 31 வரை நிறுத்திவைக்க உத்தரவிடப்படுகிறது. இந்த உத்தரவு அரசியலமைப்புக்கு உட்பட்ட அமைப்புகளுக்கும் பொருந்தும். இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: