வடசென்னையில் கொரோனா மருத்துவ பணியில் இளைஞர்கள்; ஆட்டோவில் வைத்து நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வழங்கி அசத்தல்

சென்னை: சென்னை தண்டையார்பேட்டை பட்டேல் நகர் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் கடமை கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை என்ற பெயரில் சமூக நல அறக்கட்டளை நடத்தி வருகின்றனர். அப்பகுதியில் உள்ள  சிறுவர்களுக்கு கல்வி புகுத்தும் நோக்கில்அறக்கட்டளையை தொடங்கிய இளைஞர்கள் தற்போது கொரோனா வேகமாக பரவி வரும் நேரத்தில் கொரோனா நோயாளிகளுக்கு மருத்துவ உதவிகளை செய்து அசத்தி வருகின்றனர்.

கொரோனா 2 வது அலை பரவ தொடங்கியதில் இருந்தே அதிகளவில் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தேவைபடக்கூடிய சூழ்நிலையில் இந்த இளைஞர்கள் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வழங்க திட்டமிட்டு தனியாக ஆட்டோவில் ஆக்சிஜன்  சிலிண்டரை வைத்து ஆட்டோவை ஆம்புலன்சாக மாற்றி கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வழங்கி வருகின்றனர்.

வடசென்னையில் தண்டையார்பேட்டை பகுதியில் உள்ள மக்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு சிறு துளியாக ஒரு ஆட்டோ உடன் மக்களுக்கான மருத்துவ பணியில் ஈடுபட தொடங்கிய இவர்கள் இன்று  சிறு அளவிலான கன்ட்ரோல் மையம் வைத்து 2 ஆட்டோ உடன் வடசென்னை பகுதி முழுவதும் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வழங்கி வருகின்றனர். மேலும் தங்களுக்கு சென்னை முழுவதும் பல இடங்களில் இருந்து  அழைப்புகள் வருவதாகவும், தங்களால் செல்ல முடியாத நேரத்தில் அதே பகுதியை சேர்ந்தவர்களை தொடர்பு கொண்டு நோயாளிகளுக்கு தேவையான உதவிகளை கிடைக்கப்பெற செய்கின்றனர்.

Related Stories: