சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக காத்திருந்த 4 நோயாளிகள் உயிரிழப்பு?

சென்னை: சென்னையில் சிகிச்சைக்காக காத்திருந்த 4 நோயாளிகள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக மற்ற மாவட்டங்களை விட, சென்னையிலும் பாதிப்பு கூடுதலாக இருக்கிறது. நேற்று ஒரேநாளில் 30,355 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் ஆங்காங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. நேற்று தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 293 பேர் உயிரிழந்தனர். இதில் 131 பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 162 பேர் அரசு மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்றவர்கள் ஆவர். இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்நிலையில் சென்னை, ராஜீவ்காந்தி மருத்துவமனையில் பல்வேறு இடங்களில் இருந்து சிகிச்சைக்காக 4 பேர் அழைத்து வரப்பட்டிருந்தனர். படுக்கை வசதி இல்லாத காரணத்தினால், அவர்கள் ஆம்புலன்சில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், அவர்கள், மாலை உயிரிழந்து விட்டதாக கூறப்படுகிறது.

Related Stories: