முதல்வரின் பொதுநிவாரண நிதிக்கு மதிமுக சார்பில் ரூ.10 லட்சம் நிதி: வைகோ முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம்

சென்னை:  தமிழகத்தில் கொரோனாவை எதிர்கொள்ள தமிழக அரசுக்கு கூடுதலாக நிதி தேவைப்படுகிறது. எனவே, முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நன்கொடை வழங்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின்  பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். இதையேற்று மதிமுக சார்பில் முதல்வாரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் நிதி அளித்துள்ளது. இது குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு  எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

கொரோனா பெருந்தொற்று நோய் ஏற்படுத்தி இருக்கின்ற பாதிப்புகளை எதிர்கொள்ள, தமிழக அரசு  மேற்கொள்கின்ற மக்கள் நல்வாழ்வு மருத்துவப் பணிகளுக்கு, தாராளமாக நிதி வழங்குமாறு தாங்கள் விடுத்து இருக்கின்ற அழைப்பை ஏற்று, மதிமுகவின் சார்பில்,  ரூ 10 லட்சம் நிதி வழங்குகின்றோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அளித்த காசோலையை அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு. சின்னப்பா, தலைமைச் செயலகத்தில்,  நிதித்துறை செயலாளர் கிருஷ்ணனிடம் நேற்று பிற்பகல் 1 மணியளவில், நேரில்  சந்தித்து வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: