கொரோனா தடுப்புபணிகள் தொடர்பாக நாளை அனைத்துக்கட்சி கூட்டம்: முதல்வர் மு.க ஸ்டாலின் அழைப்பு

சென்னை: கொரோனா தடுப்பு தொடர்பாக நாளை சட்டமன்றத்தில் இடம்பெற்றுள்ள அனைத்துக்கட்சி தலைவர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. நோய் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அனைத்து கட்சி தலைவர்களும் ஆலோசனை வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். சென்னையில் தலைமை செயலகத்தில் மாலை 5 மணிக்கு அனைத்து கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. கொரோனா பரவல் தடுப்பு மற்றும் தடுப்பூசி தொடர்பாக கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கொரோனா தடுப்பு பணிகள் தொடர்பான சட்டமன்ற கட்சி தலைவர்களுடனான ஆலோசனை கூட்டம் நாளை மாலை 5 மணிக்கு சென்னை தலைமை செயலகத்தில் நடைபெறும் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. பெரும்பாலான அரசியல் கட்சிகள் தற்போது சட்டமன்றத்தில் இடம்பெற்றிருக்கின்ற நிலையில் சட்டமன்ற கட்சி தலைவர்களுக்கான அழைப்பினை தற்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ளார். அடுத்த 2 வாரத்தில் கொரோனா பரவல் என்பது உச்சத்தில் இருக்கும் நிலையில் தடுப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். அதேபோல தடுப்பூசி விநியோகம் தொடர்பான பல்வேறு விசயங்கள் குறித்து மிக முக்கியமான முடிவுகளை எடுக்க வேண்டும். அந்த அடிப்படையில் தமிழக முதல் மு.க ஸ்டாலின் அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்களையும் அழைத்து ஆலோசனை நடத்த இருக்கிறார்.

Related Stories:

>