முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கை விசாரித்த சிபிஐ முன்னாள் அதிகாரி ரகோத்தம்மன் கொரோனாவுக்கு பலி...

சென்னை : சிபிஐ முன்னாள் அதிகாரி ரகோத்தம்மன் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கை விசாரித்து வந்தவர் சிபிஐ உயர் அதிகாரியாக இருந்த ரகோத்தம்மன். பணி ஓய்விற்கு பின்னர் சென்னை கே.கே.நகரில் வசித்து வந்தார். இந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து சென்னை திருமங்கலத்தில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்தார். இவர் எழுதிய ராஜீவ் கொலை வழக்கு மர்மம் விலகும் நேரம் என்ற புத்தகம் அப்போது சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த புத்தகத்தில் முன்னாள் பிரதமரின் படுகொலை தொடர்பாக பல கேள்விகளை ரகோத்தம்மன் எழுப்பி இருந்தார். தமிழ், ஆங்கிலம் என்ற 2 மொழிகளிலும் இந்த புத்தகம் வெளியானது. சுமார் 36 ஆண்டுகள் சிபிஐயில் பணியாற்றிய ரகோத்தம்மனுக்கு காவல்துறை விருது மற்றும் குடியரசு தலைவர் விருதுகளை அரசு வழங்கி கவுரவித்தது.

Related Stories:

>