தமிழகம் முழுவதும் 2 நாளில் ரூ.855 கோடிக்கு மதுவிற்பனை: டாஸ்மாக் தகவல்

சென்னை: தமிழகத்தில் கடந்த 2 நாளில் ரூ.854.93 கோடிக்கு மதுவிற்பனை நடைபெற்றுள்ளது. கொரோனா பரவலை ஒழிக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தநிலையில், நேற்று முதல் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இரண்டு வாரம் தொடர் முழு ஊரடங்கு காரணமாக மதுவகைகளை வாங்கி இருப்பு வைக்க டாஸ்மாக் கடைகளில் ஏராளமான குடிமகன்கள் குவிந்தனர். அட்டை பெட்டிகள், சாக்குப்பை, பிளாஸ்டிக் பெட்டிகள் ஆகியவற்றை கொண்டுவந்து மதுவகைகளை வாங்கிச்சென்றனர்.

அந்தவகையில், சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களில் மட்டும் தமிழகத்தில் ரூ.854.93 கோடிக்கு மதுவிற்பனை நடைபெற்றுள்ளது. அதன்படி, 8ம் தேதி (சனிக்கிழமை) அன்று ரூ.426.24 கோடிக்கு மதுவிற்பனை நடைபெற்றது. இதேபோல், நேற்று முன்தினம் 9ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ரூ.428.69 கோடிக்கு மதுவிற்பனையாகியுள்ளது. ஒட்டு மொத்தமாக, சென்னை மண்டலம் ரூ.98.96 கோடி, திருச்சி மண்டலம் ரூ.87.65 கோடி, சேலம் மண்டலம் ரூ.76.57 கோடி, மதுரை மண்டலம் ரூ.97.62 கோடி, கோவை மண்டலம் ரூ.67.89 கோடிக்கு மதுவிற்பனை நடைபெற்றுள்ளது.

Related Stories: