கூட்டம், கோஷம் இல்லாமல் கொரோனா விதிகளை பின்பற்றி அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடத்தலாம்: சென்னை மாநகர போலீஸ் அனுமதி

சென்னை: கொரோனா ஊரடங்கின்போது கூட்டம் கூடாமலும், தொண்டர்கள் கோஷம் எழுப்பாமலும் சமூக இடைவெளி, மாஸ்க் அணிந்து அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தை நடத்த சென்னை மாநகர போலீசார் அனுமதி அளித்துள்ளனர்.

தமிழக எதிர்க்கட்சி தலைவரை தேர்வு செய்ய கடந்த வெள்ளிக்கிழமை சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இபிஎஸ்  மற்றும் ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏக்களிடையே யார் எதிர்க்கட்சி தலைவராக தேர்வு செய்வதில் கடும் போட்டி நிலவி வருகிறது. 6 மணி நேரம் நடந்த எம்எல்ஏக்கள் கூட்டத்தில் கடும் போட்டி நிலவியதால் எதிர்க்கட்சி தலைவர் யார் என்று  தேர்வு செய்ய முடியாமல் திங்கள்கிழமை காலை 9.30 மணிக்கு கூட்டத்தை ஒத்தி வைத்தனர். இந்நிலையில் கொரோனா குழு ஊரடங்கு இன்று அதிகாலை 4 மணியில் இருந்து நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் உள் அரங்கு மற்றும்  பொதுஇடங்களில் எந்த வித பொதுக்கூட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து எதிர்க்கட்சி தலைவரை தேர்வு செய்ய அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று காலை நடைபெற உள்ள எம்எல்ஏக்கள் கூட்டத்துக்கு சென்னை போலீஸ் கமிஷனர் அனுமதி அளிக்க  வேண்டும் என்று அதிமுக வடசென்னை தெற்கு மாவட்ட செயலாளர் பாலகாங்கா தலைமையிலான கட்சி நிர்வாகிகள் நேற்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அனுமதி மனு ஒன்று அளித்தனர்.அந்த மனுவின் படி போலீசார் எம்எல்ஏ  கூட்டம் நடத்த அனுமதி வழங்குவது குறித்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினர். அதன் பிறகு, அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தை கட்சி அலுவலகத்தில் நடத்தலாம். அலுவலகம் முன்பு கூட்டம் கூடக் கூடாது. கோஷம் எழுப்பக்  கூடாது. கொரோனா விதிமுறைகளான சமூக இடைவெளி, மாஸ்க் அணிந்து அதிமுக கூட்டம் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories: