தமிழகத்துக்கு 7.46 லட்சம் டோஸ் கோவாக்சின், கோவிஷீல்டு வந்தது

சென்னை,: தமிழகத்திற்கு நேற்று 7.46 லட்சம் டோஸ்கள் கோவாக்சின், கோவிஷீல்டு வந்ததையடுத்து இதுவரை 82,31,720 வந்துள்ளது. தமிழகத்தில் முதற்கட்டமாக சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்களுக்கு போடப்பட்டது. அதன்பிறகு 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், 45 வயதுக்கு மேல் இணைநோய் உள்ளவர்களுக்கும், பின்னர் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. அதன்படி கடந்த 4ம் தேதி வரை கோவிஷீல்டு 62,03,590 டோஸ், கோவாக்சின் 11,57,139 டோஸ் வந்துள்ளது. இந்நிலையில் ஐதாரபாத்தில் இருந்து விமானம் மூலம் கடந்த 6ம் தேதி பார்சல்களில் 1 லட்சம் கோவிஷில்டு தடுப்பூசியும் வந்துள்ளது. மேலும் தமிழகத்தில் 6ம் ேததி வரை 8.83 சதவீதம் தடுப்பூசி வீணானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் 2 லட்சத்து 56 ஆயிரத்து 493 தடுப்பூசிகள் இருப்பில் இருந்தது.

இந்நிலையில் நேற்று 1.66 லட்சம் கோவாக்சின் தடுப்பூசிகளும், மாலையில் 5.8 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் என 7.46 லட்சம் டோஸ்கள் வந்தது. இதையடுத்து தமிழகத்திற்கு கோவிஷீல்டு-64,03,590 டோஸ்கள், கோவாக்சின்- 10,82,130 டோஸ்கள் என மொத்தம்   74,85,720 டோஸ்கள் வந்துள்ளது. மேலும் நேற்று வந்த 7.46 லட்சம் தடுப்பூசிகள் வருகையடுத்து இதுவரை மொத்தம் 82,31,720 வந்துள்ளது. இந்த தடுப்பூசிகள் சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் உள்ள சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது. விரைவில் அந்த தடுப்பூசிகள் மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: