நாளை முதல் முழு ஊரடங்கு எதிரொலி; சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் மக்கள்: பரனூர் சுங்கச்சாவடி ஸ்தம்பித்தது

செங்கல்பட்டு: தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த, நாளை முதல் 24-ம் தேதிவரை முழு ஊரடங்கு அமலுக்கு வருகிறது. இதனால் நேற்றும் இன்றும் சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் செங்கல்பட்டு அருகே பரனூர் சுங்கச்சாவடி வாகன நெரிசலில் ஸ்தம்பித்தது. செங்கல்பட்டு போலீசார், போக்குவரத்து நெரிசலை சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், அங்கு பஸ்சுக்கு காத்திருக்கும் மக்களிடம் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும்படி போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர். இதையடுத்து, அங்கு வரும் அரசு பஸ்களில், சுங்கச்சாவடியில் காத்திருக்கும் பயணிகளை சொந்த ஊர்களுக்கு ஏற்றி அனுப்பும் பணிகளிலும் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories:

>