தாய், மனைவி, மகனை பறிகொடுத்த கொரோனா நோயாளி வீட்டில் 39 பவுன் திருட்டு

கோவை: கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே செங்காளிபாளையத்தை சேர்ந்தவர் பரமானந்தன் (62). காய்கறி வியாபாரி. இவரது 85 வயதான தாய் கடந்த மாதம் கொரோனாவில் பாதிக்கப்பட்டு இறந்தார். தொடர்ந்து பரமானந்தனின் மனைவி, மகனுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இவர்களும் இரு வாரத்துக்கு முன் அடுத்தடுத்து இறந்தனர். இதைத்தொடர்ந்து பரமானந்தன் கொரோனா பாதித்து, கோவை அரசு மருத்துவமனையில் கடந்த 1ம் தேதி சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை முடிந்து நேற்று முன்தினம் வீட்டிற்கு திரும்பினார். அப்போது வீட்டின் கதவு பூட்டு உடைந்து கிடந்தது. பீரோவில் இருந்த 39 பவுன் நகைகளை கொள்ளையர்கள் திருடி சென்றிருந்தனர். மேலும் அங்கு மிளகாய் பொடி தூவி சென்றுள்ளனர். கொரோனாவுக்கு தாய், மனைவி, மகனை பறிகொடுத்தவருக்கு இது மேலும் அதிர்ச்சியை அளித்தது. வீட்டிற்கு வெளிேய உள்ளாட்சி நிர்வாகம் சார்பில் கொரோனா தொற்று பகுதி என அறிவிப்பும் செய்யப்பட்டிருந்தது. இது தெரிந்தே கொள்ளையர் கைவரிசை காட்டியுள்ளனர்.

Related Stories:

>