போலீஸ் வாகனம் மீது கல்வீசிய இருவர் கைது

சென்னை: தலைமைச் செயலக குடியிருப்பு  காவல் நிலைய ரோந்து வாகனம் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தது. இதில் முதல் நிலைக்காவலர்  ஜெயபிரகாஷ், இரண்டாம் நிலைக்காவலர் ஜெய ஜீவன்குமார் ஆகிய இருவரும் இரவு 11.40 மணியளவில் ஓட்டேரி பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.  அப்போது, அங்கு கூட்டமாக நின்று கொண்டிருந்தவர்களை கலைந்து செல்லுமாறு கூறினர். இதனால் ஆத்திரமடைந்த கூட்டத்திலிருந்த 2 நபர்கள் காவல் ரோந்து வாகனத்தின் மீது கல் எறிந்து தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர். இதுகுறித்து முதல் நிலைக்காவலர் ஜெயபிரகாஷ் தலைமைச்செயலக குடியிருப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அதே பகுதியை சேர்ந்த தாமஸ்(27), அப்பு(23) ஆகிய இருவரை கைது செய்தனர்.

Related Stories:

>