சமூக வலைதளங்களில் கேலி, கிண்டல்களை தவிடு பொடியாக்கிய வைகோவின் அசராத அரசியல் பயணம்: 10 ஆண்டுக்கு பின் பேரவை செல்லும் மதிமுக

சென்னை:  சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எடுக்கும் முடிவு தமிழக அரசியலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுவதுண்டு. ஆனால், அவர் எடுக்கும் முடிவுகள் குறித்து  எப்போதும் ஒரு தரப்பு கேலி, கிண்டல் செய்து மீம்ஸ்களை பரப்பி வருகிறது. ஒரு கட்டத்தில் வைகோ குறித்த மீம்ஸ் எல்லை மீறி சென்றன.

 வைகோ இடம்பெற்றிருக்கும் கூட்டணி ஆட்சிக்கு வந்தததில்லை என்பது போன்ற விமர்சனங்களை சமூக வலைதளங்களில் பரப்பி வந்தனர். இதனால், மீம்ஸ் போடுபவர்களுக்கும், மதிமுகவினருக்கும் சமூக வலைதளங்களில் சில ேநரங்களில்  வாக்குவாதம் நடப்பது தொடர்கதையாகி வந்தது.  ஆனால், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீம்ஸ் போடுபவர்களை கண்டுகொள்ள வேண்டாம். மீம்ஸ் போடுபவர்களுக்கு வைகோ அரசியல் பயணம், வைகோ செய்த சாதனை குறித்து சமூக  வலைதளங்களில் பதிவிட்டு பதிலடி கொடுக்குமாறும் தெரிவித்தார்.

 அதை எல்லாம் பொருட்படுத்தாமல் வைகோ அரசியலில் தனது உழைப்பை முழுமையாக செலுத்தி வந்தார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை முதல்வர் அரியணையில் ஏற்றாமல் ஓயமாட்டேன் என தேர்தல் பிரசாரம் செய்தார். இந்நிலையில்,  திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. காலத்தின் தேவை கருதி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடவும் வைகோ இசைவு தெரிவித்தார்.  நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி  பெற்றது.

இந்நிலையில், மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்ட 6 இடங்களில் சாத்தூர், அரியலூர், வாசுதேவநல்லூர், மதுரை தெற்கு என 4 தொகுதிகளில் வெற்றி கிடைத்துள்ளது.  இந்த வெற்றி மூலம் சமூக வலைதளங்களில் வந்த கேலி, கிண்டல்கள் எல்லாம்  தவிடு பொடியாகியது. சென்டிமெண்ட் விமர்சனத்துக்கும் வைகோ முற்றுப்புள்ளி வைத்துவிட்டார். ஏறத்தாழ 10 ஆண்டுகளுக்கு பின்பு மதிமுக சட்டப் பேரவைக்குள் செல்வது குறிப்பிடத்தக்கது.

Related Stories: