எய்ட்ஸ் தடுப்பு பணியில் ஈடுபட்ட தொண்டு நிறுவனத்துக்கான தொகையை வழங்க மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு

சென்னை: எய்ட்ஸ் தடுப்பு பணியில் ஈடுபட்ட தொண்டு நிறுவனத்துக்கான தொகையை வழங்க மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ரிடோ தொண்டு நிறுவனத்தின் புகாரின் பேரில் தமிழக எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்துக்கு மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரியில் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு பணியில் ஈடுபட்டதற்காக ரூ.30.28 லட்சம் வழங்கக்கோரி புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ.94.076 மட்டுமே விடுவிக்கப்பட வேண்டியுள்ளதாக தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் விளக்கம் அளித்துள்ளது. மனுதாரர் லூகாஸ் பாபுவுக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ரூ. 1 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும் என மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: