சென்னை: பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களில் நிலக்கரி எடுக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில துணை தலைவர் சேதுராமன் தெரிவித்துள்ளார். வேளாண் மண்டலங்களில் நிலக்கரி எடுக்க எதிர்ப்பு தெரிவித்து சேதுராமன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், தஞ்சை மாவட்டம் வடசேரி உள்ளிட்ட பகுதிகளில் பூமிக்கடியில் நிலக்கரி உள்ளது. இந்த பகுதிகளில் 66 ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு ஆய்வு செய்யப்படுகிறது.
சுமார் 463 அடியில் இருந்து 740 அடி ஆழம் வரை பழப்பு நிலக்கரி படிமங்கள் உள்ளன. சுமார் 755 மில்லியன் டன் அளவில் நிலக்கரி படிமங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களில் நிலக்கரி எடுக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று கூறினார். தொடர்ந்து பேசிய சேதுராமன், அரியலூர் மாவட்டம் மைக்கேல்பட்டி நிலக்கரி உள்ள பகுதியாக இருக்கிறது.
கடலூர் மாவட்டம் கிழக்கு சேத்தியார்தோப்பு நிலக்கரி உள்ள பகுதியாக கண்டறியப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்ட பகுதிகளை உள்ளடக்கிய வடசேரி பகுதி நிலக்கரி உள்ள பகுதி. ஒன்றிய அரசின் அழைப்பாணையின் படி விண்ணப்பத்திற்கான கடைசி நாள் மே 30 ஆகும். வேளாண் மண்டலங்களில் நிலக்கரி எடுக்க அரசு அனுமதி தராது என மாநில தொழில்துறை விளக்கம் அளித்துள்ளது என்றார்.
The post பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களில் நிலக்கரி எடுக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்: அறிவியல் இயக்கத்தின் துணை தலைவர் பேட்டி appeared first on Dinakaran.