மு.க.ஸ்டாலினுக்கு விஏஓ சங்கம் வாழ்த்து

சென்னை: சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்றுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சங்கத்தின் மாநில தலைவர் சீனிவாசன் நேற்று வெளியிட்ட வாழ்த்து செய்தி: மு.க.ஸ்டாலின் தலைமையில் ஏகோபித்த நம்பிக்கை அடிப்படையில் பெருவாரியான ஆதரவினை பெற்று நல்லாட்சி பொறுப்பினை ஏற்றுள்ள புதிய அரசுக்கு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் நல்வாழ்த்துக்களையும், ஆதரவையும் தெரிவித்துக்கொள்கிறோம். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்பதற்கு ஏற்ப தமிழக மக்களின் அமோக ஆதரவு பெற்று தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டு எல்லோருடைய நம்பிக்கை நட்சத்திரமாக இன்று திகழ்கிறார். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: